Wednesday 22 February 2012

காவல் கோட்டம் விருதுக்கு தகுதியானதா??

இந்த வார குமுதத்தில் முழு பதிவும் உள்ளது



எழுத்தாளர் ஜெயமோகனுக்கும்
குமுதம் பத்திரிகைக்கும்…. மாதவராஜ்
எழுத்தாளர் ஜெயமோகன், “எழுத்தாளர்களுக்கென்று கம்யூனிஸ்ட் கட்சியில் 1770 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது இதுவரை காவல்கோட்டத்தைப் போல ஒரு உருப்படியான வேலையைச் செய்திருக்கிறர்களா?” என கேள்வி எழுப்பி இருக்கிறார். சு.வெங்கடேசனையும், காவல்கோட்டத்தையும் முன்வைத்து ஒட்டுமொத்த எழுத்தாளர் சங்க அமைப்பையே ஜெயமோகன் கேலி செய்திருப்பதாகவும், இழிவுபடுத்தியிருப்பதாகவுமே உணர்கிறேன். எழுத்தாளர் கு.அழகிரிசாமி எங்கள் பிதாமகனாக இன்னும் தன் எழுத்துக்களில் வாழ்கிறார். தமிழ் இலக்கியத்தில் முற்போக்கு எழுத்தாளர்களின் பங்கு ஒரு மகத்தான அத்தியாயம். மலரும் சருகும் எழுதிய எழுத்தாளர்.டி.செல்வராஜிலிருந்து, தாகம், சங்கம் போன்ற நாவல்களைப் படைத்த எழுத்தாளர் கு.சின்னப்பாரதியிலிருந்து அது ஆரம்பிக்கிறது. சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் வழியே பயணிக்கிறது. எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயசங்கர், ஆதவன் தீட்சண்யா, பவா.செல்லத்துரை, ஷாஜஹான் என , இன்னும் பல எழுத்தாளர்களாய் அது தன் எல்லைகளை அழகாக விரித்திருக்கிறது. இவர்களின் படைப்பு யாவும் உருப்படாதவை என ஒற்றை வார்த்தையில் நிராகரிக்கிறீர்கள். முற்போக்கு எழுத்தாளர்கள் குறித்த உங்கள் அபிப்பிராயம் இதுவே எனில், கோணலான உங்கள் இலக்கியப் பார்வையை சொல்லும் அளவுகோலும் அதுவேயாகட்டும். இப்பேர்ப்பட்ட நீங்கள் பாராட்டுவதாலும் நாங்கள் காவல்கோட்டத்தை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.



சும்மா வசை, காழ்ப்புணர்ச்சி என்று பேசுவதை விட்டு எழுத்தாளர்கள் ஜெயமோகன், சு.வெங்கடேசன் உட்பட இன்னும் காவல் கோட்டம் நாவலைக் கொண்டாடும் யாரும், அதன் உருவம் மற்றும் உள்ளடக்கம் குறித்து விவாதிக்கத் தயார் என்றால் நானும் தயாராக இருக்கிறேன். தற்கால சமூகத்துக்கு ஏற்ற எந்த மீள்வாசிப்புமற்று ஒரு வரலாற்றைப் புனைவது பெரும் கேடு. அதைச் சொல்லியாக வேண்டும்.


http://www.mathavaraj.com/2012/02/blog-post_22.html

No comments: